முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சைக்கான மாதிரி வினாப்பத்திர வகுப்புக்கள் zoom மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ் வகுப்பில் உளச்சார்பு மாதிரி வினாப்பத்திரம் 2ம் நாள் நடைபெற்ற வகுப்பில் கற்பிக்கப்பட்ட வினாப்பத்திரம் கீழே தரப்பட்டுள்ளது.
இதற்கான விடைகளும் தரப்பட்டுள்ளதுடன் விடைகள் வீடியோ வடிவிலும் பதிவேற்றப்பட்டுள்ளது. இவ்வினாப்பத்திரத்தில் கடந்த காலத்தில் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட வினாத்தாள்களில் இடம்பெற்ற வினாக்களைப் போன்ற வினாக்களும் உள்ளடங்கியுள்ளது.
வினாத்தாள்களில் பென்சிலால் எழுதுவது தவறாக கருதப்படுவதுடன் பென்சிலால் எழுதி அழிப்பதாலும் வினாப்பத்திரம் உருக்குலையலாம். இதற்காக விடைகளை காண்பதற்கு வேறான தாள்களை பெற்றுக்கொள்வது பொருத்தமாகும்.
இதற்கமைய இதிலுள்ள 1ம் வினாவிற்கு கீழே உள்ளது போல் அட்டவணை ஒன்றினை விரைவாக தயாரித்துக் கொள்வதன் மூலம் திருத்தமான விடைகளை செக்கனில் அறிய முடியும். மற்றும் மிக நீண்ட இலக்கங்களை விரைவாக கூட்டி விடை காணும் நுணுக்கங்களை அடுத்த வகுப்பில் கற்க முடியும்
அதுபோல் 6 தொடக்கம் 10 வரையான வினாக்களுக்கு ஆகக் குறைந்த எழுத்துக்களை கொண்ட சொல்லை முதலில் கண்டுபிடித்தல் பொருத்தமானது. இது போன்ற வினாக்களுக்கு தமிழ் சொற்களை கூடுதலாக கற்றுக் கொள்வது கட்டாயமாகும்.
விடைகள்
1 - 4
2 - 3
3 - 2
4 - 4
5 - 1
6 - மார்கழித்திங்கள்
7 - ஆட்சேர்ப்பு
8 - அந்தப்புரம்
9 - அகங்காரம்
10 - தலைமைத்துவம்
11 - 1
12 - 3
13 - 4
14 - 1
15 - 3
16 - 2
17 - 3
18 - 1
19 - 3
இந்த வினாத்தாள் தொடர்பான விடைகளை வீடியோ வடிவில் பார்க்க