DO III Past Paper

Tuesday, November 18, 2025

DO II EB Exam Model Paper 6 PDF With Answer E Code and Procedure Rules

அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் II அலுவலர்களுக்கான வினைத்திறமைகாண் தடைப்பரீட்சை 2025 தாபன விதிக்கோவை மற்றும் செயலொழுங்கு விதிகள் மாதிரி வினாப்பத்திரம் தொடர் 6 விடைகளுடன் தரப்பட்டுள்ளது. இது முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கும் பொருத்தமானது.


Development Officer Grade II Examination bar Exam 2025 Model paper with Answer Establishment Code and Procedure Rules 



Model Paper Download

Answer

1) i. 1/6        ii. 12        iii. அரைநாள்    iv. பொது 96    v. பொது நிர்வாக அமைச்சின்         vi. மூன்று     vii. திணைக்களத்தலைவர்     viii. பிரதம அமைச்சரின்        ix. நான்கு        x.  சனாதிபதியின்      xi. அரசாங்க அதிபருக்கு       xii. புகைவண்டியில்        xiii. இணைந்தபடி     xiv. பிரயாணச்செலவு            xv.. 7        xvi. 85        xvii. மாற்றப்பட்டபடி    xviii.. தாபனப்பணிப்பாளர்       xix. நிரந்தர போக்குவரத்து          xx. சரிசெய்கை

2. 

i. மிக அவசர தனிப்பட்ட காரணங்களுக்காக பெறமுடியும்


ii. அரசாங்க மருத்துவ சான்றிதழ் ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தப்பகின்ற சுகாதார காரணங்களுக்காக பெறமுடியும்


iii. உள்நாட்டில் கழிப்பதற்கு திணைக்களத்தலைவரின் அனுமதி பெறப்பட வேண்டும்


iv. நாட்டிற்கு வெளியே கழிப்பதற்கு அமைச்சின் செயலாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.


v. மீதமாகவுள்ள லீவுகள் மற்றும் அரைச்சம்பள லீவுகள் அனைத்தும் முடிவடைந்த பின்னரே சம்பளமற்ற லீவு வழங்கப்படும்.


vi. சம்பளமற்ற லீவுக்காலப்பகுதியில் வருகின்ற சனி, ஞாயிறு, மற்றும் அரசாங்க விடுமுறை தினங்கள் சம்பளமற்ற லீவு நாட்களாக கருதப்படும்.


3.

i. பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்

ii. இணைந்த சேவைகள் பணிப்பாளர்


4.

i. பொறுப்பு வாய்ந்த நபர் ஒருவரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட உயிர்வாழ்வு சான்றிதழ்


ii. முத்திரை மீது கைச்சாத்திடப்பட்ட பற்றுச்சீட்டு


5. 

i. ஆணைச்சீட்டு வழங்கப்படுகின்ற திகதி

ii. வழங்கும் அலுவலகம்

iii. வழங்கப்படுகின்ற சேவை

iv. பெற்றுக் கொள்பவர்

v. வழங்கும் நோக்கம் 


6.

i. பிரயாணம் செய்த வாகன வகை

ii. வாகனத்தின் பதிவு இலக்கம்


7. 

i. அவரது தொழில் புரியும் இடமும் அவரது வதிவிடமும் ஒரே நகராட்சி எல்லையில் இருத்தல்


ii. அவரது வதிவிடம் அவரது தொழில் புரியும் இடத்திலிருந்து 4 மைல்களுக்குள் இருக்கும் போது


iii. அவர் தொழில் புரியும் இடத்தைவிட அவரது வதிவிடம் பயண முடிவிற்கு அண்மையில் இருத்தல்


8.

(அ) இணைந்தபடி செலுத்தப்படுகின்ற பயிற்சி காலவெல்லை, ஆகக் கூடியது 2 வாரங்களாக இருத்தல் வேண்டும்.

(ஆ) வதிவிடத்திற்கும், பயிற்சி நிறுவனத்திற்கும் இடையிலான தூரம் ஏழு (07) மைல்களுக்கு மேற்படுதல் வேண்டும்.

(இ) பிரயாணச் செலவானது புறப்படுதல், திரும்பி வருதல் சார்பில் ஒரு பயணத்திற்கு மட்டுமே செலுத்தப்படுதல் வேண்டும்.


9. 
12 மணித்தியாலங்களுக்குக் குறையாத காலப்பகுதிக்கு முழுமையான இணைந்தபடி.

6 மணித்தியாலங்களுக்குக் குறையாத காலப்பகுதிக்கு இணைந்தபடியில் அரைவாசி (1/2).

ஓர் உத்தியோகத்தர் 24 மணித்தியாலங்களுக்கு மேல் சேவை நிலையத்துக்கு வெளியே கழிக்கும் போது மூன்று வார உச்ச கால எல்லை வரை, அந்த ஒவ்வொரு 24 மணித்தியால காலப்பகுதிக்காகவும் இணைந்த படியில் 50% வீதத்தை மேலதிகமாக அவருக்குச் செலுத்தலாம்.

10.
பெற்றோல் மோட்டார் வாகனத்திற்கு – 12ரூபா
டீசல் மோட்டார் வாகனத்திற்கு - 8 ரூபா
மோட்டார் சைக்கிளுக்கு - 2 ரூபா
பொது வாகனங்களுக்கு - 85 சதம்
சைக்கிள் - 35 சதம்

11.
வாகன சொந்தக்காரர் அரச அலுவலர் எனின் அவரது திணைக்களமும் பதவியும்

அதே பயணத்திற்காக அவர் மைல் கூலியை கோருவதில்லை என அவரிடமிருந்து பெற்ற சான்றிதழ்

உறுதிச்சீட்டில் குறிப்பிடப்பட்ட விடயத்துக்காக மாத்திரமே வாகனம் பயன்படுத்தப்பட்டது என்பதை அத்தாடசிப்படுத்தும் சான்றிதழ்


12.
i. முற்பணத் தொகை முழுமையாக ஈடுசெய்யப்படுதல் வேண்டும்.

ii. பயணம் தொடங்கவுள்ள தினத்திற்கு முந்திய வேலை நாளிலேயே முற்பணம் வழங்கப்படுதல் வேண்டும்.

iii. முற்பணத்தொகை பயணச்செலவின் ¾ பங்கிற்கு மேற்படலாகாது.

iv. முற்பணத்தை பெற்று ஒரு மாத காலத்திற்குள் குறித்த பிரயாணம் மேற்கொள்ளப்படாமலும் பிரயாணக் கோரிக்கை படிவம் சமர்ப்பிக்கப்படாமலும் இருந்தால் உத்தியோகத்தரின் சம்பளத்திலிருந்து ஒரே தடவையில் அறவிடப்பட வேண்டும்.

v. முற்பணம் தவணை முறையில் அறவிட அனுமதிக்கப்பட மாட்டாது.

vi. விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மூன்று மாத தவணைக்காலம் திணைக்களத்தலைவரால் அனுமதிக்க முடியும்.


13.

நிலைய இடமாற்றம்     - பொது 178 :
மாற்றப்பட்ட படி      - பொது 161 :
நிர்ணயிக்கப்பட்ட போக்குவரத்து படி    - பொது 35 
பொதுவான பிரயாணச் செலவு கோரிக்கை    - பொது 177 : 


14. 




Video Answers